தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை TN Weather | Heavy Rain Today | IMD Chennai Update
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இன்னொரு பக்கம் சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இந்த வானிலை மாற்றங்கள் எதிரொலியாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 31ம் தேதி கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 1ம் தேதி கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 3 முதல் 5ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஊர்களில் மழை பெய்யும் போது, இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. #TamilNaduRain #HeavyRainAlert #WeatherUpdate #RainForecast #IMD #TamilNaduWeather #MonsoonUpdate #HeavyRain #WeatherAlert #RainNews #ThunderstormAlert #SouthWestMonsoon