துரைமுருகன் இருக்கையில் அமர்ந்த மகேஷ்: முதல்வரும் கண்டுகொள்ளாததால் சீனியர்கள் அதிர்ச்சி
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. பட்ஜெட் மீதான விவாதம், அமைச்சர்களின் பதிலுரைக்கு பின், ஆளுங்கட்சி, கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள், திமுக ஆட்சியையும், முதல்வர் ஸ்டாலினையும் புகழ்ந்து பேசினர். அதை முதல்வர் ஸ்டாலின் தனது இருக்கையில் அமர்ந்தபடி ரசித்து கேட்டார். வழக்கமா அவரது இருக்கைக்கு அடுத்த இருக்கையில் மூத்த அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன் அமர்வது வழக்கம். அவருக்கு அடுத்தபடியாக துணைமுதல்வர் ஸ்டாலின் மற்றும் அடுத்தடுத்து சீனியாரிட்டியில் உள்ள அமைச்சர்களுக்கு இருக்கைககள் ஒதுக்கப்பட்டுள்ளன. உடல் நலக்குறைவால் துரைமுருகன் ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, அவர் சட்டசபைக்கு வரவில்லை. அவரது இருக்கை காலியாக இருந்த நிலையில், மிகவும் ஜுனியர் அமைச்சரான மகேஷ், திடீரென துரைமுருகனின் சீட்டில் அமர்ந்தார். #DMK| TNAssembly|MinisterMahesh|Duraimurugan| ADMK| TNelection