உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழங்குடி மாணவர் கல்வி செலவை ஏற்கும் தமிழக அரசு! ST Student | Trichy hill region | CLAT

பழங்குடி மாணவர் கல்வி செலவை ஏற்கும் தமிழக அரசு! ST Student | Trichy hill region | CLAT

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா பச்சைமலை தோனூர் மலை கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார். கட்டட வேலை செய்யும் இவருடைய மகன் பரத், சின்ன இலூப்பூர் அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். சட்டம் படிப்பதற்காக இந்த கல்வி ஆண்டுக்கான CLAT (Common Law Admission Test) என்ற சட்ட கல்வி நுழைவுத் தேர்வினை எழுதினார். அதில் பழங்குடியின மாணவர்கள் பிரிவில் தமிழக அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில் 964வது இடமும் பிடித்தார். ஜூன் 6ம் தேதி திருச்சியில் நடந்த கவுன்சிலிங்கில், திருச்சி தேசிய சட்டப் பள்ளியில் பி.காம் பி.எல். ஹானர்ஸ் பயில அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவருக்கான முழு கல்வி கட்டணத்தையும் தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை ஏற்றுள்ளது.

ஜூன் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை