உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குரூப் 2 தேர்வில் இடம்பெற்ற சர்ச்சை கேள்வி! | TNPSC | Group 2 exam | Mk stalin CM

குரூப் 2 தேர்வில் இடம்பெற்ற சர்ச்சை கேள்வி! | TNPSC | Group 2 exam | Mk stalin CM

அறிவுத்திறனை சோதிக்கவா? முதல்வர் மனம் குளிரவா? தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20 தேதி வெளியிட்டது. இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 15ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 3 லட்சத்து 81ஆயிரத்து 305 பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. குரூப்-2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு நேற்று முன்தினம் முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் குரூப் 2ஏ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதில் ஒரு கேள்வியில், தமிழ்நாட்டில், எந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக முதல்வரை தாயுமானவர் என்று மக்கள் அழைக்கின்றனர் என்ற கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. அந்த கேள்விக்கான சரியான பதிலை தேர்வு செய்யுமாறு பள்ளியில் காலை உணவு, விடியல் பயணத்திட்டம், நீங்கள் நலமா, மக்களுடன் முதல்வர், விடை தெரியவில்லை என்று பதில்களும் தரப்பட்டு இருந்தன. இதில் எது சரியானது என்று தேர்வர்கள் நினைக்கிறார்களோ அதை தேர்வு செய்யவேண்டும். இந்த கேள்வி காரணமாக டி.என்.பி.எஸ்.சி. செயல்பாட்டை கல்வியாளர்கள் உள்பட பலரும் விமர்சிக்க துவங்கி உள்ளனர். அரசு வேலைக்கான போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் கேள்வி இருக்க வேண்டும். ஆனால் இந்த கேள்வி முதல்வர் மனதை குளிர வைப்பதற்காக டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளால் சேர்க்கப்பட்டு இருக்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எதற்காக இப்படி ஒரு கேள்வி? அதற்கான தேவை என்ன? முதல்வரை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்படியான கேள்விகள் முன் வைக்கப்படுகின்றனவா என கல்வியாளர்கள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி வருகின்றனர். எப்படி இருப்பினும், இதுபோன்ற கேள்விகளை இனி கட்டாயம் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

பிப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை