உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதிய பாடத்திட்டத்தை இணையதளத்தில் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி | TNPSC | Syllabus changed | Group 2 | Gr

புதிய பாடத்திட்டத்தை இணையதளத்தில் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி | TNPSC | Syllabus changed | Group 2 | Gr

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. தேர்வர்களின் நலன் கருதியும், அரசுத் துறைகளின் தேவையை கருத்தில் கொண்டும் இத்தேர்வுகளில் பாடத்திட்டம் மாற்றி அமைத்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. ஏற்கனவே குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான தேர்வில் நேர்காணல் நீக்கப்பட்டு முதல்நிலை தேர்வு ஒன்றாகவும், முதன்மைத் தேர்வு தனித்தனியாகவும் நடைபெறும் என மாற்றம் செய்யப்பட்டது. இப்போது முதல்நிலை தேர்வின் பொதுத் தமிழ், பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் தமிழகத்தில் அரசு பணிக்காக அதிகம் பேர் எழுதும் தேர்வாக குரூப் 4 உள்ளது. இது ஒரே கட்ட தேர்வாக நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு செய்து பணி நியமனம் அளிக்கப்படும். குரூப் 4 தேர்வின் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி