அரசு பஸ்களுக்கு 'தமிழ்நாடு' ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் TNSTC| Bus Sticker| Tamilnadu Sticker| Prot
பஸ்களில் தமிழ்நாடு என பெயர் எழுதுவதில், அரசுக்கு என்ன தயக்கம்? என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார். அவரது அறிக்கை: ஆரம்ப காலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என, அரசு பேருந்துகளில் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், திமுக அரசு, தமிழ்நாடு பெயரை தவிர்த்துள்ளது. அதை செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? தமிழ்நாடு என எழுதுவதில், அரசுக்கு என்ன தயக்கம். தமிழ்நாடு என, எழுதினால், கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு விடுமா? கர்நாடகா, கேரளா, தெலுங்கானா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் அனைத்தும், தங்கள் மாநில பெயரை பெருமையோடு, பஸ்களில் எழுதியிருக்க, திமுக அரசு மட்டும், தமிழ்நாடு என்ற பெயரை அவமானமாக கருதுகிறது. மீண்டும் பழையபடி, அரசு பஸ்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் என, முழுமையாக எழுத வேண்டும். இல்லையென்றால், மாபெரும் போராட்டம் நடத்துவோம் என சீமான் கூறியுள்ளார். இதனிடையே, மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில் முக்குலத்தோர் எழுச்சி கழகத்தினர் அரசு பஸ்களில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்