/ தினமலர் டிவி
/ பொது
/ டோல்கேட் குளறுபடிக்கு கடிவாளம் போட்ட மத்திய அரசு | Toll Gate | FASTAG | 1033
டோல்கேட் குளறுபடிக்கு கடிவாளம் போட்ட மத்திய அரசு | Toll Gate | FASTAG | 1033
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. சுங்கச் சாவடிகளில் காத்திருப்பை தவிர்த்து, நெரிசலை குறைப்பதற்காக பாஸ்டேக் திட்டம் அறிமுகமானது. இதன்படி மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வங்கிகள், மொபைல் போன் நிறுவனங்கள் வழங்கியுள்ள மின்னணு அட்டைகள், வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ளன. வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும் போது, அங்குள்ள மின்னணு கருவிகள் வாயிலாக, சுங்க கட்டணம் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.
மார் 06, 2025