சுற்றுலாத் தளமாகும் சுத்துக்கேணி - கைக்கிளப்பட்டு தடுப்பணை Tourists enjoying a flowing water barrier
புதுச்சேரி மாநிலத்தின் முக்கிய நீராதாரமாக சங்கராபரணி ஆறு உள்ளது. செஞ்சி மலையில் உற்பத்தியாகி வரும் இந்த ஆறு மயிலம், இளையாண்டிப்பட்டு வழியாக புதுச்சேரி கூனிச்சம்பட்டுக்குள் நுழைந்து பாய்கிறது. இங்கிருந்து செட்டிப்பட்டு, குமராபாளையம், வம்புப்பட்டு, கைக்கிளப்பட்டு, சுத்துக்கேணி, செல்லிப்பட்டு, வில்லியனூர், அரியாங்குப்பம் வழியாக நோணாங்குப்பத்திற்கு சென்று கடலில் கலக்கிறது. breath: கூனிச்சம்பட்டில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மேலும் சுத்துக்கேணி மற்றும் செல்லிப்பட்டு ஆகிய பகுதிகளில் தடுப்பணை கட்டியதன் விளைவாக விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீராதாரத்தை பெருக்கும் வகையில் சுத்துக்கேணி தடுப்பணைக்கு அடுத்ததாக செட்டிப்பட்டில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. அதேபோல் விழுப்புரம் மாவட்டம் வீடுரில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அணை கட்டி குடிநீர், பாசன வசதிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணை நீர் தமிழ்நாட்டில் 2,200 ஏக்கர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், வீடுர் அணை நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் சங்கராபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. புதிதாக சுத்துக்கேணி - கைக்கிளப்பட்டு பாலமும் திறக்கப்பட்டு அங்கும் ஓர் தடுப்பணை உள்ளது. தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் வரத்து உள்ளதால் சுத்துக்கேணி பகுதியில் உள்ள பழைய தடுப்பணை நிரம்பி வழிகிறது. பொதுமக்களும், டூரிஸ்ட்களும் தண்ணீர் பாய்வதை கண்டு மகிழ்ச்சியுடன் தடுப்பணையில் இறங்கி ஆனந்த குளியல் போட்டு குதுாகலிக்கின்றனர். தடுப்பணையின் அழகை செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். புதுச்சேரியில் பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்ட செல்லிப்பட்டு தடுப்பு அணை உடைந்து விட்டது. தற்போது சுத்துக்கேணி பழைய தடுப்பு அணையில் தண்ணீர் வழிந்து சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கிறது. இப்பகுதியை சுற்றுலாத்துறை மேம்படுத்தினால் ஏராளமான பயணிகளை கவரமுடியும். இப்பகுதி மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசு இதை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்றனர். இதுகுறித்து புதுச்சேரி சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில் கத்துக்கேணி - கைக்கிளப்பட்ட தடுப்பணை சுற்றுலாத் தலமாக அறிவிக்க ஏற்ற இடமாக உள்ளது. அரசின் ஒப்புதல் பெற்றதும் விரைவில் சுற்றுலாத்தளமாக அறிவிக்கப்படும் என்றனர். இங்கிருக்கும் தண்ணீர் தான் ஊசுட்டேரி சென்றடையும். தற்போது பெய்துள்ள மழையால் ஊசுட்டேரி நிரம்பியுள்ளது. புயல் உருவாவதால் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தண்ணீர் திறப்பு காரணமாக சிறிது நேரத்திலேயே போலீஸார் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பணையில் இருந்தவர்களை வெளியேற்றினர். தடுப்பணையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புடன் டூரிஸ்ட்டுகள் குளிக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். #Tourists #EnjoyingNature #FlowingWater #WaterBarrier #Suthukeni #KaikillapattuDam #Pudhucherry #TravelDiaries #Waterfalls #BeautifulDestinations #TravelInspiration #PudhucherryDiaries