போதை கண்டறியும் கருவியை உடைத்து அலப்பறை | Traffic Police Attacked
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி - கோவில்பத்து புறவழிச் சாலை சந்திப்பில் டிராபிக் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த தற்காலிக அரசு பணியாளர் மங்களதாசனை நிறுத்தி எஸ்எஸ்ஐ செந்தில் தம்பி என்ன குடிச்சிருக்கியா, என கேட்டு போதை கண்டறியும் கருவியை வைத்து சோதனை செய்ய வந்துள்ளார். ஆத்திரமடைந்த மங்களதாசன் எஸ்எஸ்ஐ. செந்திலை தள்ளி விட்டார். அதில் அவர் காயம் அடைந்தார். போதை கண்டறியும் கருவியும் சேதமடைந்தது.
அக் 21, 2024