உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்த 5 விதிமீறல்களுக்கு மட்டுமே ஸ்பாட் பைன்: கமிஷனர் உத்தரவு chennai police commissioner| traffic sp

இந்த 5 விதிமீறல்களுக்கு மட்டுமே ஸ்பாட் பைன்: கமிஷனர் உத்தரவு chennai police commissioner| traffic sp

சென்னையில் டிராபிக் போலீசார் வாகன ஓடிகளை ஆங்காங்கே மடக்கி ஸ்பாட் பைன் போட்டு வருகின்றனர். ஆனால் போலீசார் சிலர் அதிகாரத்தை பயன்படுத்தி அத்துமீறி அபராதங்கள் விதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சட்டப்படியாக செயல்படாமல் கணக்கு காண்பிப்பதற்காக வாகன ஓட்டிகள் மீது ஏகத்துக்கும் பைன் போடுவதாகவும் புகார் கூறப்படுகிறது. ஹெல்மெட் அணியாதது உட்பட 25 வகையான போக்குவரத்து விதி மீறல்களுக்கு வளைத்து வளைத்து ஸ்பாட் பைன் விதிக்கின்றனர். இதனால், அதிகம் பாதிக்கப்படுவது டூவீலர்கள் ஓட்டிகளே. இப்பிரச்னைக்கு தீர்வு காண சென்னை காவல் ஆணையர் அருண் ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இனி ஐந்து வகையான போக்குவரத்து மீறல்களுக்கு மட்டுமே ஸ்பாட் பைன் விதிக்க வேண்டும் என்று டிராபிக் போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளார். வாகனத்தை அதிவேகமாக ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது; நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டுவது; மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல்; டூவீலரில் இருவருக்கு மேல் பயணம் செய்வது போன்ற போக்குவரத்து வீதிமீறல்களுக்கு மட்டும் ஸ்பாட் பைன் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை