/ தினமலர் டிவி
/ பொது
/ பதற வைக்கும் சென்னை கல்லூரி மாணவர்கள் வீடியோ | Train | Chennai College students
பதற வைக்கும் சென்னை கல்லூரி மாணவர்கள் வீடியோ | Train | Chennai College students
ஜூலை 1ல் சென்னையில் இருந்து திருப்பதி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் சென்றனர். மறுபுறம் சென்னையில் இருந்து திருத்தணி சென்ற மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணித்தனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்ற மின்சார ரயில் ஆவடி அருகே சிக்னலுக்காக நின்றிருந்தது. இதை கண்ட பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் சிலர் அபாய சங்கிலியை இழுத்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தியுள்ளனர். ரயிலில் இருந்து கீழே இறங்கி தண்டவாளத்தில் கிடந்த ஜல்லியை எடுத்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது வீசியுள்ளனர்.
ஜூலை 19, 2024