உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்து: போராடும் தீயணைப்பு படை | Train fire | Tiruvallur Train fire

திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்து: போராடும் தீயணைப்பு படை | Train fire | Tiruvallur Train fire

அருகில் நெருங்க கூட முடியல டேங்கர் ரயில் தீ விபத்தில் பகீர் தண்டவாளத்தில் பரவும் தீ திருவள்ளூர் அருகே 52 டேங்கர்களில் எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு தீ பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடியும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 8 பெட்டிகள் எரிந்து நாசமானது. விபத்து ஏற்பட்ட இடத்திற்கு 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது. இப்போது பாதிப்பு இல்லாத பெட்டிகளை தனியாக கழற்றி அகற்றும் முயற்சிகள் நடந்தது. டீசல் ஏற்றி வந்த டேங்கர் ரயில் என்பதால் தீ தானாக கொஞ்சம் கொஞ்சமாக அணைந்தால் மட்டுமே தீயணைப்பு வாகனங்கள் மூலம் நுரை தண்ணீர் பாய்ச்சி கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் ஆய்வு நடத்தினார்.

ஜூலை 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை