இன்டர் லாக்கிங் சிஸ்டம் எப்படி செயல்படும்? விபத்து நடக்காதா? cuddalore train accident| railway
கடலூர், செம்மாங்குப்பம் அருகே ரயில்வே கிராஸிங்கை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியது. இதில் சகோதரன் சகோதரியான செழியன், சாருமதி மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் இறந்தனர். ரயில் வரும் தகவலை பெற்ற கேட் கீப்பர் கேட்டை மூடியதாகவும், காத்திருந்த வாகன ஓட்டிகள், கேட்டை திறக்க சொல்லி அழுத்தம் கொடுத்தால் திறந்ததாக கூறப்படுகிறது. அவர் அப்படி செய்தது தவறு என ரயில்வே அதிகாரிகள் கூறினர். ஆனால், ரயில்வே கேட் திறந்தே இருந்ததாக விபத்தில் உயிர்தப்பிய வேன் டிரைவர் கூறியிருக்கிறார். கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்என் சிங், கேட் கீப்பரின் அலட்சியம் தான் இந்த விபத்துக்கு அடிப்படை காரணம் என கூறியிருக்கிறார்.