உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொடூர செயலை வீடியோ எடுத்து ரசித்த திருநங்கை கும்பல்... சென்னையிலா இப்படி? Transgenders viral video

கொடூர செயலை வீடியோ எடுத்து ரசித்த திருநங்கை கும்பல்... சென்னையிலா இப்படி? Transgenders viral video

சென்னையை சேர்ந்த திருநங்கைகள் சிலர் கூட்டமாக சேர்ந்து நள்ளிரவு நேரங்களில் செய்து வந்த கொடூர செயல் தொடர்பான வீடியோக்கள் இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. நள்ளிரவு நேரத்தில் பிளாட்பார்மில் தூங்குபவர்கள், சவாரிக்காக ஆட்டோவில் காத்திருக்கும் டிரைவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை அந்த திருநங்கைகள் குறி வைத்துள்ளனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, அவர்களின் கால்களில் தீயை கொளுத்தி விட்டு கொண்டாடினர். பாதிக்கப்பட்டவர்கள் வலியால் துடிப்பதை வீடியோ எடுத்து, அதை பார்த்து பார்த்தும் ரசித்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு, வியாசர்பாடி, ஓட்டேரி, பட்டாளம் பகுதிகளில் இதை வேலையாகவே அந்த திருநங்கைகள் சுற்றித்திரிந்தனைர். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். திருநங்கைகளை கையும் களவுமாக போலீசார் பிடித்தனர். ஆனால் அவர்கள் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. தாங்கள் செய்தது தவறு என்பதையும் உணரவில்லை. மாறாக விசாரிக்க வந்த போலீசை ஆபாசமாக பேசி கலாய்த்தனர். ஒன்று கூடி நக்கல் செய்ததால் போலீஸ்காரர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திருநங்கைகள் மீது எந்த ஆக்சனும் எடுக்க முடியாமல் மனம் நொந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். போலீசை கேலி செய்வதையும் வீடியோ எடுத்து அந்த திருநங்கைகள் ரசித்தனர்.

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ