/ தினமலர் டிவி
/ பொது
/ நிழலுக்கு ஒதுங்கிய பெண்கள்; எதிர்பாராத சம்பவம்: பரபரப்பு தகவல் tree uprooted tiruvannamalai Cheyyar
நிழலுக்கு ஒதுங்கிய பெண்கள்; எதிர்பாராத சம்பவம்: பரபரப்பு தகவல் tree uprooted tiruvannamalai Cheyyar
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கழணிப்பாக்கம் கிராமத்தில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், கால்வாயை தூர்வாரும்பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மதியம் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் அருகில் உள்ள ஆலமரத்தின் நிழலில் தொழிலாளர்கள் சற்றே ஓய்வெடுத்தனர். தொழிலாளர்கள் மரத்தின் அடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்தது. ஆலமரத்தின் பெரிய கிளை அடியோடு சாய்ந்து மரத்தடியில் அமர்ந்து இருந்தவர்கள் மீது விழுந்தது. இதில், அன்னபூரணி வயது 75 வேண்டா வயது 65 ஆகிய இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மே 12, 2025