உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தை உற்றுநோக்க வைத்த பழங்குடி மாணவி | Tribal student salem | Tribal Student IIT Chennai

தமிழகத்தை உற்றுநோக்க வைத்த பழங்குடி மாணவி | Tribal student salem | Tribal Student IIT Chennai

நினைத்ததும் கிடைத்திடாத அடிப்படை தேவைகள், குடும்பத்தில் வறுமை, தந்தை இழப்பு இப்படி எல்லா துயரங்களையும் தாண்டி இங்கிருந்து ஒரு சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது. Breath சேலம் கல்வராயன் மலை மீது அமைந்துள்ள கருமந்துறையை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் ஆண்டி சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்தார். மூன்று பெண் குழந்தைகள், ஒரு மகனை வளர்க்க காவிதா கஷ்டப்பட்டார். தந்தை இறப்புக்கு பின் மகன் கணேஷ் படிப்பை நிறுத்திவிட்டு குடும்ப பாரத்தை தாங்கினார். கவிதா கூலி வேலைக்கு செல்ல, கணேஷ் டெய்லர் வேலைக்கு சென்றார். இருவரின் வருமானத்தில் குடும்பம் இயங்கியது. மூன்று மகள்களும் கல்வி தடைபடாமல் படித்தனர். 2வது மகள் ராஜேஸ்வரி படிப்பில் சிறந்து விளங்கினார். கருமந்துறையில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்தார். 10ம் வகுப்பு தேர்வில் 500க்கு 438 மதிப்பெண்களும், 12ம் வகுப்பு தேர்வில் 600க்கு 521 மதிப்பெண்களும் பெற்றார். இதையடுத்து ராஜேஸ்வரி பொறியில் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார்.

ஜூன் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை