அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் செய்த அட்டூழியம் | Trichy | Govt Teacher | School Teacher
முரட்டு தூக்கம் சார் உங்களுக்கே நல்லா இருக்கா? போதையில் மல்லாந்த ஆசிரியர் திருச்சி மணப்பாறை அருகே வையமலைபாளையத்தில் அரசு பள்ளி உள்ளது. 20 மாணவர்கள் படிக்கின்றனர். ஆவாரம்பட்டியை ஆரோக்கியராஜ் இங்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திங்களன்று காலை போதையில் பள்ளிக்கு வந்த இவர் கத்தி ரகளை செய்துள்ளார். சேர், டேபிளை கீழே தள்ளி விட்டதோடு வகுப்பறையிலேயே படுத்துவிட்டார். ஆசிரியர் மயங்கி கிடப்பதை கண்ட மாணவர்கள் பெற்றோர்களை அழைத்தனர். பெற்றோர்களுடன் அங்கு திரண்ட ஊர் மக்கள் ஆரோக்கியராஜை எழுப்பி பார்த்தனர். உளறியபடி படுத்து கிடந்ததால் முகத்தில் தண்ணீர் அடித்து போதையை தெளிய வைத்தனர். பள்ளியில் ஆசிரியர் போதையில் கிடந்தது குறித்து வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் லதாவுக்கு தகவல் சொல்லப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள், போலீசார் பெற்றோர்களை சமாதானம் செய்தனர். ஆசிரியரை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் அவர் போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் ஆரோக்கியராஜை சஸ்பென்ட் செய்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.