உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காருக்காக கம்யூனிஸ்ட் நிர்வாகி காட்டிய ஆத்திரம் | Trichy | Temple Car Parking

காருக்காக கம்யூனிஸ்ட் நிர்வாகி காட்டிய ஆத்திரம் | Trichy | Temple Car Parking

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். அங்குள்ள பகவதி அம்மன் மற்றும் விநாயகர் கோயில் பூசாரியாக உள்ளார். விநாயகர் கோயில் அருகே சாதிக் பாஷா என்பவர் குடியிருக்கிறார். அவரது காரை எப்போதும் விநாயகர் கோயில் வாசல் முன் தான் நிறுத்துவாராம். பக்தர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று சொல்லியும் சாதிக் பாஷா கேட்கவில்லை. வரும் 11ம் தேதி தைப்பூசம் என்பதால் முருகனுக்கு மாலை போட்டவர்கள் கோயிலுக்கு வருவார்கள். காரை வேறு இடத்தில் எடுத்து நிறுத்துங்கள் என சாதிக் பாஷா வீட்டுக்கு சென்று கூறி இருக்கிறார் பூசாரி சதீஷ்குமார். அப்போது சாதிக் பாஷா வீட்டில் இல்லை. அவரது மனைவி சாயிதாவுக்கும், சதீசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சதிஷ் அங்கிருந்து கிளம்பி பகவது அம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டார். இது குறித்து அறிந்த சாதிக் பாஷா கோயிலுக்கு சென்று தகராறு செய்துள்ளார். எப்படி நான் வீட்டில் இல்லாத போது நீ காரை எடுத்து நிறுத்த சொல்லலாம் என கேட்டுள்ளார். திடீரென மறைத்து வைத்திருந்த அறிவாளை எடுத்து பூசாரி சதீசை சராமாறியாக வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு துவாக்குடி அரசு ஆஸ்பிடலில் சேர்த்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற திருவெறும்பூர் போலீசார் பகவதி அம்மன் கோயில் அருகே கிடந்த அரிவாளை மீட்டனர். தப்பி ஓடிய சாதிக் பாஷாவை தேடி வருகின்றனர். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை