உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உஷாராக ரயிலில் எடுத்து வந்தவரை தூக்கிய போலீஸ் | Trichy junction | Gold, cash seized | Youth arrested

உஷாராக ரயிலில் எடுத்து வந்தவரை தூக்கிய போலீஸ் | Trichy junction | Gold, cash seized | Youth arrested

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கோட்ட கமிஷனர் டாக்டர் அபிஷேக், உதவி கோட்ட கமிஷனர் பிரமோத்நாயர் தலைமையிலான போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை செய்துகொண்டிருந்தனர். சென்னையில் இருந்து திருச்சி வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய இளைஞர் ஒருவர், மாஸ்க் அணிந்து சற்று வித்தியாசமாக நடந்து வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த ஆர்பிஎப் போலீசார், அவரது பையை சோதனை செய்தனர். அதில், 1 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 795.90 கிராம் தங்கம் மற்றும் 500 ரூபாய் கட்டுகளாக 15 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !