உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆயுதங்களை கைப்பற்ற முயன்றபோது சம்பவம்

ஆயுதங்களை கைப்பற்ற முயன்றபோது சம்பவம்

திருச்சி ஸ்ரீ ரங்கத்தை சேர்ந்த ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ், திருவானைக்காவல், அம்பேத்கர் பகுதியில் நேற்று இரவு 5 பேர் கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவருடன் இருந்த மனைவிக்கு காலில் வெட்டு விழுந்தது. ஸ்ரீரங்கம் போலீசார் விசாரிக்கின்றனர். ரவுடி ஜம்புகேஸ்வரன் தலைமையிலான கேங் தான் இந்த கொலையை செய்ததை உறுதி செய்தனர். தனிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டையில், ஜம்பு உட்பட 5 பேரும் சிக்கினர். சுரேஷ் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே ஊசி பாலம் பகுதியில் மறைத்து வைத்திருந்தனர். அவற்றை கைப்பற்றுவதற்காக ரவுடி ஜம்புவை போலீசார் அழைத்து சென்றனர். மறைத்து வைத்த அரிவாளை எடுத்த ஜம்பு, போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். இன்பெக்டர் வெற்றிவேல் அவரை பிடிக்க துப்பாக்கியால் சுட்டார். இடதுகால் முட்டியில் குண்டு பாய்ந்து ஜம்பு சுருண்டு விழுந்தார். அவரை திருச்சி மருத்துவமனையில் சேர்த்தனர். ரவுடி தாக்கியதில் காயமடைந்த இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், செந்தில், எஸ்.ஐ ராஜகோபால், கான்ஸ்டபிள் சதீஷ் ஆகியோரும் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். அவர்களை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி சந்தித்து நலம் விசாரித்தார்.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை