உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்டப்பகலில் சினிமா பாணியில் நடந்த சம்பவம்: 4 பேரை மடக்கியது போலீஸ்!Trichy|Girl Kidnap|4 Arrest

பட்டப்பகலில் சினிமா பாணியில் நடந்த சம்பவம்: 4 பேரை மடக்கியது போலீஸ்!Trichy|Girl Kidnap|4 Arrest

திருச்சி, சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்தவர் ஜெகன். பி.காம் பட்டதாரி. 25 வயதான போதிலும் ஜெகன் எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் சுற்றித் திரிந்து உள்ளார். இந்த நிலையில் ஜெகனுக்கு, கல்லூரி படிப்பை முடித்து, வேலைக்கு செல்லும் உறவுக்கார பெண் மீது காதல் மலர்ந்துள்ளது. அந்த பெண், போகும் வரும் வழியில் எல்லாம் ஜெகன் காதல்வலை வீசி உள்ளார். ஆனால் அந்த இளம்பெண் கண்டு கொண்டதாய் தெரியவில்லை. பொறுமை இழந்த ஜெகன், ஒருநாள் இளம்பெண்ணை வழிமறித்து தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். அந்த பெண் மறுத்துவிட்டார்.

ஏப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ