உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இன்ஸ் மண்டை உடைப்பு: உ.பி. டிரைவர் ஆவேசம் Truck driver attacked traffic police inspector chennai to

இன்ஸ் மண்டை உடைப்பு: உ.பி. டிரைவர் ஆவேசம் Truck driver attacked traffic police inspector chennai to

ென்னை துறைமுகத்தில் இருந்து மும்பைக்கு நேற்றிரவு கன்டெய்னர் லாரி புறப்பட்டது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமது அலி லாரியை ஓட்டினார். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள சோதனைசாவடியில் லாரி வந்தபோது, அங்கிருந்த ஒப்பந்த ஊழியர்கள் மடக்கினர். டிரைவரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பணம் கொடுக்க மறுத்த டிரைவர் முகமது அலி வண்டியை வேகமாக ஓட்டிச் சென்று விட்டார். உடனே சோதனைச்சாவடி ஊழியர்கள், வண்டி நம்பரை நோட் செய்தனர். சோதனைக்கு ஒத்துழைக்காமல் லாரியை நிறுத்தாமல் சென்றது, அதிவேகத்தில் வண்டியை ஓட்டிச் சென்றது உள்ளிட்டவற்றுக்காக 40 ஆயிரம் பைன் போட்டு ஒனர் நம்பருக்கு அனுப்பினர். மும்பையில் இருந்த லாரி ஓனர், 40 ஆயிரம் பைன் அமவுன்டை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். டிரைவர் முகமது அலிக்கு போன் போட்டு என்னய்யா பண்ணி வச்சிருக்கே... 40 ஆயிரம் பைன் வந்திருக்கு என கேட்டார். நடந்ததை முகமது அலி சொன்னார். நீ என்ன பண்ணுவியோ, ஏதோ பண்ணுவியா, போலீசிடம் சமரசம் பேசி, வழக்கை பைசல் பண்ணிட்டுவா என சத்தம் போட்டார். இதனால் முகமது அலி லாரியை மீண்டும் திருப்பிக் கொண்டு, நசரத்பேட்டை சோதனைச்சாவடிக்கு வந்தார்.. அப்போது, அங்கு டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் 58 பணியில் இருந்தார். அவரிடம் விஷயம் போனது. ஏன்யா வண்டியை நிறுத்தாம போன என அவர் கேட்டார்,, அதுக்கு நாற்பதாயிரம் பைனா என திரும்ப கேட்டார் முகமது அலி, இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அங்கே ஓனர் தொந்தரவு... இங்கே போலீஸ் டார்ச்சர் என வெறுத்துப் போன டிரைவர் முகமது அலி, லாரியில் இருந்த இரும்பு ராடை எடுத்து வந்து, இன்ஸ்பெக்டரை சரமாரி தாக்கினார். இதில், அவர் மண்டை உடைந்தது. இன்ஸ்பெக்டர் சந்திரனின் அலறல் சத்தம் கேட்டு சோதனைச்சாவடி ஊழியர்கள் ஓடி வந்தனர். போலீசாரும் ஓடி வந்தனர். முகமது அலி உடனே லாரியை ஸ்டார்ட் செய்து, தடுப்புகள் மீது மோதித் தள்ளி விட்டு வேகமாக ஓட்டிச் சென்று விட்டார். தகவலறிந்ததும் போலீசாரும் ரோந்து வாகனம் மற்றும் பைக்குகளில் விரட்டிச் சென்றனர். கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் தூரத்துக்கு லாரியை விரட்டிச் சென்று, திருமழிசையில் போலீசார் மடக்கிப்பிடித்தனர். டிரைவர் முகமது அலியை கைது செய்தனர் பரிசோதித்துப் பார்த்தபோது அவர் மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் சந்திரன் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். போதையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்டையை லாரி டிரைவர் உடைத்த சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. TruckDriver #TrafficPolice #Inspector #Chennai #Mumbai #ContainerLorry #ChennaiPolice #Crime #RoadSafety #LawEnforcement #MumbaiTraffic #TruckTransport #PoliceSupport #HighwaySafety #DriverAwareness #AccidentPrevention #PublicSafety #TrafficViolation #CityPolice #TransportationSafety

செப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !