வரைபடம் வெளியிட்டு கனடாவை கடுப்பேத்தும் ட்ரம்ப் | Trump | justin trudeau
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக அறிவித்து இருந்தார். அதிருப்தியின் காரணமாக, சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் ஆதரவை இழந்ததால் அவர் இந்த முடிவை எடுத்தார். இந்தாண்டு இறுதியில் கனடாவில் தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில், அமெரிக்காவின் 51வது மாகாணமாக, கனடா இணையலாம் என்று அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் கொளுத்தி போட்டார். அமெரிக்கா உடன் இணைவதை கனடா மக்களே விரும்புவார்கள் எனக்கூறிய ட்ரம்ப், வரிகள் குறையும், வர்த்தக பற்றாக்குறை இருக்காது, கனடா பாதுகாப்பாக இருக்கும். அத்துடன், அமெரிக்கா பெரிய தேசமாக மாறும், ஒன்றிணைவோம் என கூறியிருந்தார். ட்ரம்பின் அளித்த ஆஃபருக்கு கனடா முதலில் எந்த ரியாக் ஷனும் காட்டவில்லை. மவுனம் கலைத்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவின் ஒரு பகுதியாக கனடா மாறும் வாய்ப்பே இல்லை என்று பதில் அளித்தார்.