டிரம்புக்கு எதிராக போராட்டத்தில் குதித்த அமெரிக்கர்கள்! Trump | USA | Public Protest
அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அரசின் செலவினங்களை குறைக்கும் நோக்கில், பல்வேறு துறைகளில் பணிபுரிந்த ஊழியர்களை அவர் பணிநீக்கம் செய்தார். மேலும் அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற கொள்கையின்படி, பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்தார். தொடர்ந்து, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை, அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பி வருகிறார். அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடும் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்து, அவர்களையும் நாட்டை விட்டு வெளியேற்றி வருகிறார். அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹேண்ட்ஸ் ஆப் என்ற பெயரில், அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி, கடந்த 5ம் தேதி போராட்டம் நடத்தினர்.