உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் பற்றி சீனா-அமெரிக்க அதிபர்கள் பேச்சு trump | Xi Jinping| TikTok Deal

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் பற்றி சீனா-அமெரிக்க அதிபர்கள் பேச்சு trump | Xi Jinping| TikTok Deal

அமெரிக்கா - சீனா இடையே வரி விதிப்பதில் வர்த்த போர் நடக்கும் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு உறவு, டிக்டாக் செயலி விவகாரம் உட்பட பல விஷயங்களை பேசியுள்ளனர். அப்போது சீன அதிபர், தன்னிச்சையாக வர்த்த கட்டுப்பாடுகளை விதிப்பதை அமெரிக்க கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. சீன அதிபர் உடனான உரையாடல் பயனுள்ளதாக இருந்ததாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வர்த்தகம், ஃபென்டனைல், ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம், டிக்டாக் செயலி ஒப்பந்தம் உள்ளிட்ட பல விவகாரங்களில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். தென்கொரியாவில் அக்டோபர் இறுதியில் நடைபெற உள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் இருவரும் சந்திப்பதாக ஒப்புக்கொண்டோம். இருவரும் அதை எதிர்பார்த்து உள்ளோம். அடுத்தாண்டு தொடக்கத்தில் நான் சீனாவுக்கு செல்வேன். அதே போல், அதிபர் ஜி ஜின்பிங்கும் அமெரிக்காவுக்கு சரியான நேரத்தில் வருவார் என டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்தும் நடவடிக்கையாக, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் சீனா மீது ஐரோப்பிய நாடுகள் அதிக வரி விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அதிபர் டிரம்ப், சீன அதிபர் உடனான பேச்சவார்த்தை நல்லபடியாக இருந்தது என கூறியுள்ளார். நாங்கள் மீண்டும் தொலைபேசியில் பேசுவோம். TikTok டிக்டோக்கிற்கான ஒப்புதலை பாராட்டுகிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

செப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ