மூடிய ரூமில் டிரம்ப்-பாக் தளபதி பயங்கர சதி trump asim munir meeting | israel vs iran | india vs pak
இந்தியாவுடன் நெருக்கமாக நட்பு பாராட்டி வரும் அமெரிக்கா, அதே தட்டில் பாகிஸ்தானையும் வைத்திருப்பது முரண்பாட்டின் மொத்த உருவம். காஷ்மீரின் பஹல்காமுக்குள் புகுந்து அப்பாவி இந்தியர்கள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். ஆண்களை மட்டும் குறிவைத்து கொன்று, பெண்களை விதவைகளாக்கி, அதை வெற்றியாக கொண்டாடினர். மிருகங்களை விட கொடிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்தது, ஆயுத சப்ளை செய்தது; பின்னால் இருந்து எல்லா உதவிகளையும் செய்தது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும், ராணுவமும் தான். இதற்கான எல்லா ஆதாரமும் இந்தியாவிடம் இருக்கிறது. இருப்பினும், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை மட்டும் துல்லியமாக குண்டு வீசி தாக்கியது இந்தியா. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக போருக்கு வந்த பாகிஸ்தானையும் பதிலடி நடவடிக்கையில் பந்தாடியது. 4 நாட்கள் நடந்த போரில் பாகிஸ்தானை ஓட ஓட அடித்தது நம் ராணுவம். வேறு வழியே இல்லாமல் போரை நிறுத்திக்கொள்ளலாம் என்று கெஞ்சி வழிக்கு வந்தது பாகிஸ்தான் ராணுவம். எல்லா நட்பு நாடுகளுக்கும் தூது குழுவை அனுப்பி என்ன நடந்தது, பாகிஸ்தான் எப்படி எல்லாம் பயங்கரவாதத்தை தூக்கி பிடிக்கிறது என்பதை இந்தியா தெள்ளத்தெளிவாக சொல்லி விட்டது. மற்ற எல்லா நாடுகளையும் விட அமெரிக்காவுக்கும் டிரம்புக்கும் உண்மையில் என்ன நடந்தது என்பது நன்றாக தெரியும்.