டிரம்ப், நெதன்யாகுவிடம் மோடி பரபரப்பு பேச்சு israel vs hamas | trump gaza peace plan modi netanyahu
காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் 2 ஆண்டுகளாக தீவிர போரில் ஈடுபட்டு வந்தது. இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்தார். காசாவில் போரை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலை அவர் கேட்டுக்கொண்டார். இஸ்ரேலும் அதற்கு சம்மதம் தெரிவித்தது. பதிலுக்கு தங்கள் வசம் இருக்கும் எல்லா பிணைக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று இறுதி எச்சரிக்கை விடுத்தார். டிரம்ப் மிரட்டலுக்கு ஹமாஸ் பணிந்தது. பிணைக்கைதிகளை விடுவிக்க முன்வந்தது. இதையடுத்து 2 ஆண்டு கழித்து இப்போது காசாவில் போர் நிறுத்தம் வந்து விட்டது. அனைத்து பிணைக்கைதிகளும் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர். பல நாடுகளும் இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு நம் பிரதமர் மோடி அடுத்தடுத்து போன் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரம்பிடம் பேசிய மோடி, போர் நிறுத்தம் கொண்டு வர ஏற்பாடு செய்ததற்கு பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேசினேன். அவர் கொண்டு வந்த காசா அமைதி திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்தேன். அப்படியே இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சு வார்த்தையில் ஏற்பட்டு இருக்கும் முன்னேற்றம் குறித்தும் விவாதித்தோம். வரும் நாட்களில் இன்னும் இதை தீவிரமாக எடுத்துச்செல்ல ஒப்புக்கொண்டோம் என்று கூறி உள்ளார். அதே போல் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசியது தொடர்பாகவும் மோடி அறிக்கை வெளியிட்டார். அதில், ‛டிரம்ப் கொண்டு வந்த காசா அமைதி திட்டத்தை ஏற்று போரை நிறுத்த முன்வந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பாராட்டு தெரிவித்தேன். பிணைக்கைதிகளை விடுவிக்கவும், காசாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையை வரவேற்றேன். அதே நேரம், உலகின் எந்த மூலையில், எந்த வடிவத்தில் பயங்கரவாதம் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம் என்று கூறி உள்ளார். #GazaPeachPlan #IsraelVsHamas #ModiTalksToTrump #Netanyahu #MiddleEastPeace #GazaConflict #Hamas #Israel #InternationalRelations #PeaceTalks #GlobalPolitics #BilateralRelations #ConflictResolution #DiplomaticTalks #TrilateralDiscussions #NetanyahuSpeaks #PoliticalDialogue #PeaceNegotiations #WorldLeaders