இஸ்ரேலுக்காக டிரம்ப் இறங்கி அடிக்கும் பகீர் பின்னணி trump netanyahu meets | white house | US vs Iran
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசை தோற்கடித்து, குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றார். இதன் மூலம் 2வது முறையாக அவர் அதிபர் ஆகும் வாய்ப்பு வந்தது. ஜனவரி 20ம் தேதி முறைப்படி அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். முதல் நாளே தடாலடியான பல உத்தரவுகளை பிறப்பித்து அமெரிக்கா மட்டும் இன்றி உலக நாடுகளையே அதிர வைத்தார். உலகின் முக்கிய தலைவர்கள் பலருடன் தொலைபேசியில் பேசி வருகிறார். சில நாட்கள் முன்பு மோடியும் டிரம்பும் தொலைபேசியில் பேசினர். இந்த நிலையில் 2வது முறை அதிபராக பொறுப்பேற்ற பிறகு உலகிலேயே முதல் தலைவராக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வெள்ளை மாளிகைக்கு வரும்படி அதிகாரப்பூர்வமாக அழைத்துள்ளார். இது தொடர்பாக நெதன்யாகுக்கு அவர் கடிதமும் அனுப்பினார். அதில் டிரம்ப் கூறி இருப்பது: அடுத்த வாரம் வெள்ளை மாளிகை வருகை தரும்படி உங்களை அழைக்கிறேன். இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் அண்டை நாடுகளில் அமைதியை கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்த காத்திருக்கிறேன். 2வது முறை அதிபர் ஆன பிறகு முதல் தலைவராக உங்களை தான் வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறேன் என்று டிரம்ப் கூறி உள்ளார். டிரம்ப்-நெதன்யாகு சந்திப்பு சரியாக எந்த தினம் நடக்கும் என்று வெள்ளை மாளிகை குறிப்பிடவில்லை. இருப்பினும் பிப்ரவரி 4ம் தேதி வெள்ளை மாளிகை சந்திப்பு இருக்கும் என்று இஸ்ரேல் அரசு வட்டாரம் கூறி உள்ளது. டிரம்பும் நெதன்யாகுவும் தடாலடியாக செயல்படக்கூடிய தலைவர்களில் முக்கியமானவர்கள்.