இந்தியாவை சீண்டும் பாக் பயங்கரவாதிகளுக்கு டிரம்ப் மரண அடி | Trump on USAID | LeT | India vs Pakistan
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சி என்று ஒரு நிறுவனம் அமெரிக்க அரசாங்கம் வசம் உள்ளது. இந்த நிறுவனத்தை சுருக்கமாக USAID (யுஎஸ் எய்ட் என்று படிக்கவும்) என்பார்கள். 100 நாடுகளில் மனிதாபிமான உதவி மற்றும் சமூக நலன், அறிவியல், சுகாதாரம் சார்ந்த விவகாரங்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது இந்த நிறுவனம். நிதி உதவி என்றால், ஆயிரம், இரண்டாயிரம் கோடி அல்ல. கிட்டத்தட்ட ஆண்டுக்கு நாலரை லட்சம் கோடி ரூபாயை வாரி இரைக்கிறது. சமீபத்தில், யுஎஸ் எய்ட் வழங்கி வரும் சர்வதேச நிதியை தான் தடாலடியாக நிறுத்தி அதிர வைத்தார் அதிபர் டிரம்ப். அவரது நடவடிக்கையால் பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேஷியா உட்பட 100 நாடுகளுக்கு பாதிப்பு. இந்தியாவில் சுகாதாரம் சார்ந்த பணிகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த பல கோடி நிதியும் இதன் மூலம் நிறுத்தப்படும். இது ஒரு கவலையான விஷயம் என்றாலும் கூட, டிரம்பின் நடவடிக்கையால் இந்தியாவுக்கு ஒரு நல்ல செய்தியும் கிடைத்துள்ளது.