உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்ப் உயிர் அச்சுறுத்தலுக்கு பின்னால் இருக்கும் காரணம்!

டிரம்ப் உயிர் அச்சுறுத்தலுக்கு பின்னால் இருக்கும் காரணம்!

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளதால் இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 13ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் டிரம்ப் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். குண்டு உரசி காது பகுதியில் காயமடைந்த டிரம்ப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடு திரும்பினார்.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை