வன்மம் கக்கிய டிரம்ப்! மூக்கை அறுத்த அமெரிக்க AI | trump tariff on india | ind vs US | trump vs AI
இந்தியா, அமெரிக்கா இடையே நடந்த வர்த்தக பேச்சு வார்த்தையில் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அமெரிக்காவில் இறங்கும் இந்தியாவின் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு என்று இந்தியாவை சாடிய டிரம்ப், உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவிடம் எண்ணெய், காஸ் வாங்குவதால் தான் இந்தியா மீது வரி போட்டதாக சொன்னார். ‛ரஷ்யாவுடன் இந்தியா என்ன செய்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. இரண்டு நாட்டின் பொருளாதாரமும் செத்து விட்டது. அவர்கள் அதை இன்னும் நாசமாக்குவார்கள் என்று வன்மத்தை கொட்டினார். உண்மையில் இந்தியாவின் பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது என்பது மொத்த உலகத்துக்கும் தெரியும். ஆனால், அமெரிக்கா நினைத்தபடி வர்த்தக பேச்சில் இந்தியா வளைந்து கொடுக்கவில்லை. அந்த ஆத்திரத்தை தான் இப்படி கொட்டினார் டிரம்ப். இப்போது டிரம்புக்கு இந்திய அரசியல் தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னது போல் இந்தியாவின் பொருளாதாரம் செத்து விட்டதா? உண்மை என்ன? என்று அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கிய ஏஐ தளங்களிடம் கேட்ட போது, டிரம்ப் மூக்கை அறுக்கும் விதமாக அவற்றின் பதில்கள் இருந்தன. ChatGPT, Grok, Gemini, Meta AI மற்றும் Copilot ஆகிய அமெரிக்க ஏஐ தளங்களிடம் தான் இந்த கேள்வி முன் வைக்கப்பட்டது. ChatGPT-யிடம் கேட்டபோது, ‛இந்தியாவின் பொருளாதாரம் செத்து விட்டது என்பதில் உண்மை இல்லை. இந்திய பொருளாதாரம் துடிப்பானது. உலகிலேயே சக்திவாய்ந்த பொருளாதாரங்களில் ஒன்று என்று நெற்றி பொட்டில் அடித்தது போல் பதில் சொன்னது. அதே போல், ‛இந்திய பொருளாதாரம் சாகவில்லை. உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா முக்கியமானது என்று Grok சொன்னது. இதே கேள்வியை ஜெமினி ஐஏ தளத்தில் கேட்டபோது, ‛இந்திய பொருளாதாரம் வலுவான வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதார பட்டியலில் இருக்கிறது என்றது. Meta AI-யிடம் இந்திய பொருளாதாரம் செத்து விட்டதா என்று கேட்ட போது, ‛இல்லை. அழிவில் இருந்து மிகவும் நீண்ட தொலைவில் உள்ளது. இந்திய பொருளாதாரம் மிக வலுவானது. ஜிடிபி அடிப்படையில் உலகில் 4வது சக்தி வாய்ந்த பொருளாதாரத்தை இந்தியா கொண்டிருக்கிறது என்று டிரம்ப்புக்கு உரைக்கும்படி சொன்னது. இன்னொரு பக்கம் Copilot ஏஐ தளமும் டிரம்ப் கூற்றை நிராகரித்தது. ‛இந்திய பொருளாதாரம் செத்து விட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு நேர் எதிரானது என்று அடித்து சொன்னது.