உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்காவின் விசா கட்டுப்பாடு trump| us president| USA travel ban

வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்காவின் விசா கட்டுப்பாடு trump| us president| USA travel ban

அமெரிக்க அதிபர் ஆனதில் இருந்தே டெனால்ட் டிரம்ப் பல அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். முக்கியமாக சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக செயல்படுகிறது. இதனால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூட்டான் உட்பட 41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் நிர்வாக தரப்பில் கிடைத்த வரைவு அறிக்கையின்படி, 41 நாடுகள் 3 குழுக்களாக வரையறுக்கப்பட்டு உள்ளன. முதல் குழுவில், ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா, கியூபா, வடகொரியா, சோமாலியா, வெனிசுலா, ஏமன் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் குடிமக்கள், முழு விசா தடையை எதிர்கொள்ள நேரிடும். 2வது குழுவில், எரித்திரியா, ஹைதி, லாவோஸ், தெற்கு சூடான் உட்பட 5 நாடுகள் உள்ளன. இந்த நாட்டு பயணிகளுக்கு விசா வழங்குவதில் பகுதியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. குறிப்பாக சுற்றுலா, மாணவர் விசா, புலம்பெயர்வு விசாவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். 3வது குழுவில், பாகிஸ்தான், பூடான், மியான்மர் உள்ளிட்ட பல நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளுக்கு விசா விவகாரத்தில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ள குறைபாடுகள் சரி செய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். ஆனால், அமெரிக்காவின் பயண தடை தகவல் ஊகமானது என்று பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

மார் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை