நேரடி போரில் ரஷ்யா-ஐரோப்பா! ஆட்டமே மாறுது Trump vs Zelenskyy | Russia vs EU | operation sky shield
வெள்ளை மாளிகை சம்பவத்துக்கு பிறகு உலக அரசியல் அதிரடி மாற்றங்களை கண்டு வருகிறது. இப்போது உக்ரைனை பாதுகாக்க ஐரோப்பிய நாடுகள் எடுத்திருக்கும் முக்கிய முடிவு, உக்ரைன்-ரஷ்யா போரை ஐரோப்பா-ரஷ்யா போராக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ‛ஆப்ரேஷன் ஸ்கை ஷீல்டு (Operation sky shield). அதென்ன ஆப்ரேஷன் ஸ்கை ஷீல்டு? ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் போட்ட மெகா பிளான் என்ன? ஐரோப்பா-ரஷ்யா இடையே போர் வெடிக்குமா? அமெரிக்கா எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தார். பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து பேசினார். அப்போது டிரம்ப்-ஜெலன்ஸ்கி இடையே பயங்கர வார்த்தை மோதல் வெடித்தது. மொத்த உலகமும் அதை நேரலையில் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. அமெரிக்காவின் மரியாதையை ஜெலன்ஸ்கி கெடுத்து விட்டதாக சொன்ன டிரம்ப், அவரை வெள்ளை மாளிகையில் இருந்து அதிரடியாக வெளியேற்றினார்.