டிரம்பிடம் ஐரோப்பா சரண்டர் ஆனது இப்படி தான் | Trump vs Zelenskyy | US vs Ukraine | white house | US
அமெரிக்க அதிபர் டிரம்பும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் கடந்த வாரம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மிகப்பெரிய மோதல் வெடித்தது. டிரம்பும் ஜெலன்ஸ்கியும் நேரலையில் பகிரங்கமாக மோதிக்கொண்டது மொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கொதித்துப்போன டிரம்ப், உக்ரைன் அதிபரையும் அவரது குழுவினரையும் வெள்ளை மாளிகையில் இருந்து அதிரடியாக வெளியேற்றினார். வெள்ளை மாளிகையையும் அமெரிக்காவையும் ஜெலன்ஸ்கி அவமதித்து விட்டார் என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்துக்கு பிறகு சர்வதேச அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. ஐரோப்பிய நாடுகள் ஓரணியில் திரண்டு ஜெலன்ஸ்கிக்கு ஆதரவு தெரிவித்தன. அமெரிக்கா தயாரித்த போர் நிறுத்த ஒப்பந்தத்ததுக்கு மாற்றாக இன்னொரு போர் நிறுத்த வரைவு ஒப்பந்தத்ததை தயார் செய்தன. இதை அமெரிக்காவிடம் காட்டி ரஷ்யாவிடம் பேச்சு நடத்த பரிந்துரை செய்யப்போவதாக கூறின.