டிரம்ப் வெற்றி... உண்மையை உடைத்த பைடன் | Trump won | US Election | Trump vs Kamala | Biden Speech
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிசை தோற்கடித்து, குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார். ஜனவரி 20ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் டிரம்ப் அதிபராக பதவி ஏற்க உள்ளார். அவரிடம் முறைப்படி எல்லா பொறுப்புகளையும் இப்போதைய அதிபர் பைடன் மற்றும் அவரது அமைச்சரவை ஒப்படைக்க உள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து நாட்டு மக்களிடம் அதிபர் பைடன் உரையாற்றினார். அவர் கூறியது: அமெரிக்க மக்கள் தங்களுக்கான அரசை சுயமாக, அமைதியான முறையில் ஓட்டளித்து தேர்வு செய்து கொள்கிறார்கள். உலகிலேயே 200 ஆண்டுக்கும் மேல் சிறப்பு வாய்ந்த ஜனநாயக வரலாறை கொண்டது அமெரிக்கா. இங்கு மக்கள் விருப்பப்படி தான் அனைத்தும் நடக்கிறது. நம் தேர்தல் முறை குறித்து இந்த முறை பல சந்தேகங்களை எழுப்பி இருந்தனர். இனி அந்த கேள்விகள் எழாது என்று நினைக்கிறேன். இந்த தேர்தல் வெளிப்படையானது. மிகவும் நியாயமானது. வெற்றியோ தோல்வியோ தேர்தல் முறையை நம்பலாம் என்று இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும். நான் வகித்தது வரலாற்று சிறப்பு வாய்ந்த அதிபர் பதவி. ஜனவரி 20ம் தேதி முறைப்படி அமைதியான முறையில் நாங்கள் அதிகார பகிர்வை மேற்கொள்வோம். புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் டிரம்பிடம் பேசினேன். அவருக்கு வாழ்த்து சொன்னேன். அமைதியான முறையில் அதிகாரப்பகிர்வு நடக்கும் என்றும், அதுவரை அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு தருவோம் என்றும் உறுதி அளித்தேன். துணை ஜனாதிபதி கமலாவுடனும் பேசினேன். நாட்டுக்காக அவர் களமாடினார். களத்தில் மக்களுக்காக தீவிர பிரசாரம் செய்தார்.