ஒயிட் ஹவுஸ் சீக்ரெட் உடைத்த டிரம்ப்-பரபரப்பு பேட்டி | Trump Zelenskyy | white house | US vs EU | Rus
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்த பேச்சு வார்த்தையின் போது டிரம்பும்-உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் பகிரங்கமாக மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெள்ளை மாளிகையின் மரியாதையை ஜெலன்ஸ்கி கெடுத்து விட்டதாக டிரம்ப் அறிக்கை வெளியிட்டார். இருப்பினும் அமைதியை விரும்பும் போது அவர் மீண்டும் வெள்ளை மாளிகை வரலாம் என்றும் அவர் சொல்லி இருந்தார். இப்போது திடீரென உக்ரைனுக்கு வழங்கும் ஆயுத உதவியை நிறுத்தி வைப்பதாக தடாலடியாக அறிவித்து உக்ரைனை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். இதற்கிடையே வெள்ளை மாளிகையில் நடந்த மோசமான சம்பவம் பற்றி டிரம்ப் முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார். உக்ரைனில் விரைவில் போர் நிறுத்தம் வர வேண்டியது அவசியம். அது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. எளிதில் முடிக்க கூடிய விஷயம் தான். ரஷ்யாவுக்கு எதிரான சண்டையில் உக்ரைன் தலைவர் யாராவது போர் நிறுத்தம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால், அவரால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது என்று டிரம்ப் சொன்னார். உக்ரைன் அதிபருடன் மீண்டும் பேச்சு வார்த்தையை துவங்க வேண்டும் என்றால், அவரிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த டிரம்ப், உக்ரைன் மிகவும் மோசமான, இக்கட்டான சூழலில் உள்ளது. இந்த நேரத்தில் நாம் அவர்களுக்கு செய்து வரும் உதவிகளுக்கு அவர் அதிகம் நன்றி உள்ளவராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஐரோப்பாவை விட நாம் தான் அவர்களுக்கு அதிகமாக அள்ளி கொடுத்துள்ளோம். நியாயப்படி பார்த்தால் ஐரோப்பிய நாடுகள் தான் உக்ரைனுக்கு தாராளமாக கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் உக்ரைன் ஐரோப்பாவில் தான் இருக்கிறது. அதுவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வேலி போல் இருக்கிறது. எனவே நம்மை விட அவர்களுக்கு தான் உக்ரைன் மிகவும் முக்கியமானது.