21 மில்லியன் டாலர் யாருக்கு வழங்கியது அமெரிக்கா USAID| US funding| trump|
அமெரிக்க அதிபராக டெனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, வீண் செலவுகளை குறைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பல நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியுதவியை நிறுத்த சொல்லிவிட்டார். இந்தியாவுக்கு வழங்கும் நிதியும் நிறுத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் சொன்னார். அதாவது, 2022ல் முந்தைய அதிபர் ஜோ பைடன் ஆட்சியில், இந்தியாவில் வாக்குப்பதிவை அதிகரிக்கும் திட்டத்துக்கு 21 மில்லியன் டாலர் அதாவது 182 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக டிரம்ப் கூறினார். இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்கான திட்டத்திற்கு அவ்வளவு பணத்தை நாம் ஏன் தர வேண்டும்; தங்களுக்கு வேண்டியவர்களை தேர்வு செய்வதற்காக இந்திய பொதுத்தேர்தலில் முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தலையிட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன் என டிரம்ப் கூறியிருந்தார். இது, இந்தியாவில் பேசுபொருள் ஆனது. இது தொடர்பாக பாஜ-காங்கிரஸ் கட்சிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இச்சூழலில், அதிபர் டிரம்ப் சொன்ன 21 மில்லியன் டாலர் நிதியுதவி இந்தியாவுக்கு வழங்கவில்லை; வங்கதேசத்துக்கு வழங்கப்பட்டு இருப்பது தகவல் சரிபார்ப்பில் தெரியவந்து இருக்கிறது.