உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா பெயரை கேட்டாலே புலம்பும் டிரம்ப் | india vs us trade war | trump tariff war | modi vs trump

இந்தியா பெயரை கேட்டாலே புலம்பும் டிரம்ப் | india vs us trade war | trump tariff war | modi vs trump

இந்தியா மீது அமெரிக்கா போட்ட அடாவடி வரி காரணமாக இரு நாடுகள் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. வர்த்தகம் மற்றும் வரி பிரச்னையை காரணம் காட்டி இந்தியாவுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி போட்ட டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக மேலும் 25 சதவீதம் அபராத வரி போட்டார். இந்தியா மீது போட்ட 50 சதவீத வரியும் இப்போது அமலுக்கு வந்து விட்டது. தொடர்ந்து இந்தியா மீதான வரியை நியாயப்படுத்தி வரும் டிரம்ப், ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் ஓரணியில் திரண்டு நின்றதை பார்த்த பிறகு புதுப்புது காரணங்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார். அவரிடம் இந்தியாவுக்கு போட்ட வரியை நீக்குவது தொடர்பாக அமெரிக்கா யோசித்து வருகிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிரம்ப் இந்தியாவை வசைபாடினார். அவர் கூறியது: நாங்கள் இந்தியாவுடன் நன்றாக பழகுகிறோம். ஆனால் இந்தியா ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

செப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை