உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்க வரலாற்றில் மெகா போராட்டம்: பின்னணி என்ன? | President Trump | Protest | Washington, US

அமெரிக்க வரலாற்றில் மெகா போராட்டம்: பின்னணி என்ன? | President Trump | Protest | Washington, US

அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் அமெரிக்காவில் பல அதிரடி நடவடிக்கை எடுத்தார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியபவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். பல வெளிநாடுகளுக்கான நிதியை குறைத்ததுடன், வீட்டில் இருந்து பணி செய்யும் முறையை ரத்து செய்தார். அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது, சில துறைகளை கலைப்பது என அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் அமெரிக்க பொருட்களுக்கு பல நாடுகள் அதிக வரி விதிப்பதாக கூறி, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி விகிதத்தை உயர்த்தி உள்ளார். சீனா, உள்ளிட்ட நாடுகளுடன், அமெரிக்க நட்பு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்து உள்ளன. இந்நிலையில், அதிபர் டிரம்ப் மற்றும் பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்க் இருவருக்கும் எதிராக அமெரிக்கா முழுவதும் பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஹான்ட்ஸ் ஆப் என்ற எதிர்ப்பு பேரணி அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பேரணியில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களும், உள்ளூர் ஆதரவாளர்களும் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப்பெரிய பேராட்டங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த போராட்டம், ஆட்சி மீதான விரக்தியைக் காட்டுகிறது என ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

ஏப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை