உலக நாடுகளுக்கு வரி விதிக்க டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை US Court on Trump| Trup's Illegal activity
அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக நாடுகள் பலவற்றுக்கும் வரிகளை அதிகம் விதித்துள்ளார். பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு முன்பிருந்ததை விட, பல மடங்கு வரி விதித்துள்ளார். அதன் படி, இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதித்த டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, மேலும் 25 சதவீதம் அபராத வரி விதித்துள்ளார். எனினும் டிரம்ப்பின் வரி விதிப்புக்கு மத்திய அரசு அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. இந்நிலையில், டிரம்ப்பின் வரி விதிப்பு கொள்கையை, உலக நாடுகள் மற்றும் வர்த்தக அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன. டிரம்ப்பின் நடவடிக்கைக்கு அந்நாட்டு முன்னாள் அரசு ஆலோசகர்கள், பொருளாதார நிபுணர்கள், முன்னாள், இந்நாள் செனட்டர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிரம்ப்பின் நடவடிக்கையை எதிர்த்து நியூயார்க்கில் உள்ள வர்த்தக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், அதிபர் டிரம்ப் அதிகார மீறலில் ஈடுபட்டதாகவும், அவர் பிறப்பித்த வரிவிதிப்பு உத்தரவுகள் செல்லாது எனவும் தீர்ப்பளித்தது. வர்த்தக கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசின் சார்பில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதை விசாரித்த கோர்ட், பல நாடுகள் மீது அத்துமீறி வரி விதிக்க டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை. அவரின் செயல் அதிபரின் அதிகார வரம்புக்கு மீறிய செயல். எனினும், அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, அக்டோபர் 14ம் தேதி வரை அவர் பிறப்பித்த உத்தரவுகள் அமலில் இருக்கும் என, மேல்முறையீட்டு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அடுத்தடுத்து 2 கோர்ட்களும் ஒரே மாதிரியான தீர்ப்பளித்துள்ளது, அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. எனினும், இந்த தீர்ப்பை எதிர்த்து, அமெரிக்க அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது. அமெரிக்காவின் நன்மை கருதியே, உலக நாடுகள் மீது வரி விதிப்பு நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. அந்த உத்தரவு தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை. அப்படி வரி விதிப்பை கைவிட்டால், அது அமெரிக்காவுக்கு பெரும் பாதகமாக அமையும் என, அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். உலக நாடுகளுக்கு எதிராக தாெடர்ந்து டிரம்ப் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அமெரிக்க கோர்ட்டின் தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #USCourtonTrump| #TrumpsIllegalactivity | #USCourtJudgement | #TaxonIndia|