உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் | earthquake | 6.9 Magnitude | Tsunami advisory issued |

ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் | earthquake | 6.9 Magnitude | Tsunami advisory issued |

உலகில் அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருக்கிறது. ரிங் ஆஃப் பையர் பகுதியில் ஜப்பான் இருப்பதே இதற்கு காரணம். இதனால் அங்கு தொடர்ச்சியாக பல சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது. அப்படி தான் இப்போதும் அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் கியூஷு பகுதியில் 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 37 கிமீ ஆழத்தில் உருவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையமான இ.எம்.எஸ்.சி தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கிய நிலையில், பீதியடைந்த மக்கள் சாலைகளுக்கு ஓடினர். அங்குள்ள தென்கிழக்கு கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. முதலில் ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதாகவே எச்சரிக்கை வந்தது. அதன்பிறகே நிலநடுக்கத்தின் தீவிரம் 6.9 ரிக்டராக இருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு ஏற்பட்ட சேதங்கள், மரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஜப்பானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, 6.9, 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தென்மேற்கு தீவுகளான கியூஷு மற்றும் ஷிகோகுவை உலுக்கியது.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை