திருப்பதி விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் கொதிப்பு TTD| YTD| revanth reddy| chandrababu nai
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தமது பேரனின் பிறந்தநாளையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின் பேட்டி அளித்த சந்திரபாபு நாயுடு, திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டும் பணியமர்த்தப்பட வேண்டும். மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவர். அனைத்து மாநில தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சாமி கோயில் கட்டப்பட வேண்டும். அதுதொடர்பாக மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதப்படும். இடம் தந்தால் கோயில் கட்டப்படும். வெளிநாடுகளிலும் இந்துக்கள் அதிகம் உள்ள இடங்களில் வெங்கடேஸ்வர சாமி கோயில் கட்டப்படும். ஏழுமலை அடிவாரத்தையொட்டி மும்தாஜ் ஓட்டல் கட்டுவதற்கு 35.27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதற்கான ஒப்புதல் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையில் வணிக ரீதியாக அனுமதிக்க முடியது என சந்திரபாபு நாயுடு கூறினார்.