/ தினமலர் டிவி
/ பொது
/ கோயிலில் பிராங்க் வீடியோ; விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவு | TTF Vasan | TTF Viral Video | Tirupati
கோயிலில் பிராங்க் வீடியோ; விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவு | TTF Vasan | TTF Viral Video | Tirupati
யூடியூபர் டிடிஎஃப் வாசன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். வித்தைகளை காட்டி பைக் ரைடு, ரூல்சை மீறுவது என வாண்டடாக வழக்கில் சிக்குபவர். இதனால் அவரது டூவீலர் லைசன்சும் பறிபோனது. சில மாதங்களுக்கு முன் காரிலும் வீடியோ எடுத்து கொண்டே டிரைவ் செய்து வழக்கில் சிக்கினார். அந்த பிரச்னை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சைக்கு ரெடியாகி விட்டார் டிடிஎஃப் வாசன். சமீபத்தில் நண்பர்களுடன் திருப்பதி கோயிலுக்கு சென்ற இவர் வீடியோ எடுத்து கொண்டே பக்தர்களுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது பக்தர்கள் காத்திருப்பு அறை அருகே சென்று பிராங்க் வீடியோ எடுத்தனர்.
ஜூலை 11, 2024