கோவையில் நடக்கும் கரு மஞ்சள், கரு இஞ்சி, டிராகன் புரூட் விவசாயம்! Turmeric Farming | Dragon Fruit
உலக மஞ்சள் ஏற்றுமதியில் 60 சதவீதம் இந்தியா வசம் உள்ளது. இந்தியாவை அடுத்து பாகிஸ்தான், சீனா, ஜமைக்கா, பெரு, தைவான், தாய்லாந்து போன்ற நாடுகள் மஞ்சள் உற்பத்தி செய்கின்றன. இந்திய மண்ணில் விளையும் மஞ்சள் கிழங்கில் குர்குமின் என்ற மருந்து பொருள் அதிகம் இருப்பதால் தான் இந்திய மஞ்சளுக்கு வெளிநாடுகளில் கிராக்கி அதிகம். தமிழகத்தில் குறிப்பாக ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் விளைவிக்கப்படும் மஞ்சளில் தான் குர்குமின் என்ற மருந்து பொருள் 6.5 சதவீதம் உள்ளது. இதனால் இந்த மஞ்சளை வியாபாரிகள் விரும்பி வாங்குகின்றனர். கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி மஞ்சள் உற்பத்தியில் முத்திரை பதித்து வருகிறார். அதிலும் குர்குமின் அதிகம் உள்ள கறுப்பு மஞ்சள் உற்பத்தியில் பொன்னுசாமி ஈடுபட்டுள்ளார்.