உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 132 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றி அதிரடி Tuticorin tobacco raid| Tuticorin arrest

132 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றி அதிரடி Tuticorin tobacco raid| Tuticorin arrest

தூத்துக்குடியில் பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறி வைத்து புகையிலை பொருட்கள் விற்பது அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள கும்பல் குறித்து போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. துாத்துக்குடி நகர் முழுதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பெங்களூரில் இருந்து கார் மூலம் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டு டூவீலரில் வைத்து பள்ளி கல்லுாரி மாணவர்களிடம் விற்பதை போலீசார் கண்டுபிடித்தனர். புகையிலை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ராஜா, சுரேஷ் விஜயகுமார் , எபினேசர், சுந்தர்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட 132 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கார்பியோ கார், டூவீலரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அக் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை