ஆமா குடிச்சு இருந்தேன்! அதுக்கு இப்படி பண்ணுவீங்களா! | TV anchor | TV anchor Viral Video | Chennai |
ன்னை பாடி பகுதியை சேர்ந்தவர் ரேவதி வயது 34. இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் ரேவதி கோயம்பேட்டில் இரவில் போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் வைரலாகிறது. பார்ட்டி ஒன்றுக்கு சென்று திரும்பிய இவர் மது போதையில் இருந்துள்ளார். ரோந்து பணியில் இருந்த போலீசார் இவரது மாமாவை கேலி செய்ததால் வாக்குவாதம் முற்றியதாக கூறுகிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் போலீசார் லத்தியால் தன்னை கடுமையாக தாக்கியதாக ரேவதி குற்றம் சாட்டியுள்ளார். ஒரு நபர் ரப்பர் பைப்பால் ரேவதியை சரமாரியாக தாக்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. போலீசாரை ஆபாசமாக பேசிய விவகாரம் தொடர்பாக வீடியோ ஆதாரத்தின் படி ரேவதி மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரம் நான் குடித்து இருந்தது உண்மை தான், ஆனால் பெண் என்றும் பார்க்காமல் என்னை போலீசார் தாக்கி உள்ளனர். அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்து விடுவேன் என ரேவதி மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். #TVanchor | #TVanchorViralVideo | #Chennai | #Koyambedu | #Investigation