கருத்து சுதந்திரம் மீதான தாக்குதல் என ஷேக் ஹசீனா மகன் குற்றச்சாட்டு!| Bangladesh | Women Journalist
பெண் பத்திரிகையாளர் மர்ம மரணம் வங்கதேசத்தில் இன்னும் அடங்காத பதட்டம்! வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் மற்றும் கலவரத்தால், பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை துறந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். அங்கு பிரதமரின் வீடு சூறையாடப்பட்டு பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. அங்கு முகமது யூனுஷ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது. தொடர்ந்து ஷேக் ஹசீனா மற்றும் அவரது ஆதவராளர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு பிரபல வங்க மொழி செய்தி சேனலான காஜி டிவியில் இடைக்கால அரசுக்கு எதிரான செய்திகள் ஒளிபரப்பப்படுவதாக புகார் எழுந்தது. அதன் உரிமையாளர் கோலம் தஸ்தாகிர் காஜியை அந்நாட்டு அரசு கைது செய்தது. அந்த டிவி சேனலில் பணியாற்றும் பிரபல பெண் பத்தரிக்கையாளர் சாரா ரஹானுமா வயது 32, தலைநகர் டாக்காவில் உள்ள ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.