உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போதை கடத்தலில் நிர்வாகி தவெக எடுத்த ஆக்ஷன் TVK | DRI Raid | Methamphetamine | Nagai

போதை கடத்தலில் நிர்வாகி தவெக எடுத்த ஆக்ஷன் TVK | DRI Raid | Methamphetamine | Nagai

நாகை மாவட்டம் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன். இலங்கையில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில், பூபாலனுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 5 பேர் கொண்ட அதிகாரிகள் 10 மணி நேரமாக, பூபாலன் வீட்டில் ரெய்டு நடத்தினர். பூபாலனின் நண்பரான சுகன் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தவெக நிர்வாகி பூபாலன், நண்பர்கள் சுகன், சதீஷ், மணிகண்டன் ஆகியோரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கைது செய்தனர். போதைப்பொருள் வழக்கில் பூபாலன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கி தவெக மாவட்ட செயலாளர் சுகுமாறன் நடவடிக்கை எடுத்துள்ளார். #DRIRaid #NagapattinamNews #TVKParty #DrugTrafficking #Methamphetamine #TamilNaduNews #BreakingNewsTamil #DinamalarNews

அக் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ