உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மலையில் பறந்த தவெக கொடியை அகற்றிய வனத்துறை | TVK Flag | Vellingiri hill | Without permission | Coimb

மலையில் பறந்த தவெக கொடியை அகற்றிய வனத்துறை | TVK Flag | Vellingiri hill | Without permission | Coimb

கோவை வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் பல மணி நேரம் நடந்து சென்று இறைவனை தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் இங்குள்ள ஏழாவது மலை உச்சியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த ஒருவர் கட்சி கொடியை கம்பு ஒன்றில் ஏற்றி கட்டி விட்டு சென்றுள்ளார். அடர்ந்த காட்டில் ஓங்கி உயர்ந்த மலை உச்சியில் த.வெ.க கொடி பறக்கும் காட்சிகளை சிலர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டனர். வீடியோ வைரலானதையடுத்து வனத்துறையினர் தவெக கொடியை அங்கிருந்து அகற்றினர். போளுவாம்பட்டி வனச்சரகம், போளுவாம்ட்டி பிளாக் 2 காப்புக்காடு, வெள்ளபதி பிரிவு, பூண்டி தெற்கு சுற்றுக்குட்பட்ட 7வது மலையில் கட்டப்பட்ட கொடி அகற்றப்பட்டதாக வனத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலை மேல் தவெக கொடியை பறக்கவிட்டது யார்? எப்போது கட்டப்பட்டது? என்பது பற்றி ஆலாந்துறை போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

பிப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி