கரூர் பகீர்... பார்லியில் பாஜ உடைக்கும் உண்மை tvk karur stampede bjp truth finding team | tvk vijay
தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கூடவே விசாரணையை கண்காணித்து அறிவுரை வழங்க சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழுவும் அமைத்துள்ளது. ஏற்கனவே பாஜ சார்பில் ஹேமமாலினி தலைமையிலான உண்மை கண்டறியும் எம்பிக்கள் குழு கரூர் விசிட் செய்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து விசாரித்தது. தாங்கள் சேகரித்த பல உண்மைகள் அடங்கிய விசாரணை தொகுப்பை கட்சி தலைமைக்கு அறிக்கையையாகவும் சமர்ப்பித்தார் ஹேமமாலினி. விரைவில், நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவையும் சந்தித்து தாங்கள் சேகரித்த விவரங்களை அவர் சமர்ப்பிக்க உள்ளாராம். அதே போல் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரிலும் கரூர் சம்பவத்தை எழுப்ப பாஜ திட்டமிட்டுள்ளது. பாஜ சார்பில் எம்பி ஹேமமாலினி பேசுவார் என்று பாஜ ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாம். தமிழில் தான் அவர் பேசப்போகிறார். பார்லிமென்ட்டில் விஜய்க்கு ஆதரவாக பேச எம்பிக்கள் யாரும் இல்லாத நிலையில், ஹேமமாலினி மறைமுக ஆதரவு தருவதுடன், திமுகவை கடுமையாக விளாசப்போகிறார். அதே நேரம் இதற்கு பதிலடி தர காங்கிரஸ் தரப்பில் ஜோதிமணி எம்பி தயாராக உள்ளார் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, ஒரு சம்பவத்தை சிபிஐ விசாரணை செய்தாலோ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் விசாரணை செய்து கொண்டிருந்தாலோ அது பற்றி பார்லிமென்ட்டில் விவாதிக்கக் கூடாது என்பது நடைமுறை. இருப்பினும் அந்த விவகாரம் சார்ந்த பொதுக் கொள்கை குறித்து பொதுவாகப் பேசலாம். ஆனால் விசாரணையின் உண்மை விவரங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் மீது அலச வேண்டாம் என்று வழிகாட்டப்பட்டுள்ளது. இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிப்பாரா... அப்படி அனுமதி அளித்தால் பெரும் அமளி நடக்கும் என்பது மட்டும் நிச்சயம். #tvkkarurstampede #tvkvijay #vijayupdate #bjpfactfindingteam #mphemamalini #KarurNews #TamilNaduPolitics #FilmIndustryBuzz #VijayFans #CurrentAffairs #BJPUpdates #HemaMalini #NewsAndUpdates #TamilCinema #VijayLatest #PoliticalNews #InvestigationTeam #SocialIssues #CulturalImpact